உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்தாண்டு ரூ.18.15 கோடிக்கு நலத்திட்ட உதவி

மாற்றுத்திறனாளிகளுக்கு கடந்தாண்டு ரூ.18.15 கோடிக்கு நலத்திட்ட உதவி

ஈரோடு, டிச. 4-உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியருக்கு இடையே பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றோருக்கு பரிசளிப்பு நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பூபதி வரவேற்றார்.கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை வகித்து பரிசு வழங்கி பேசியதாவது:மாவட்டத்தில் அனைத்து அரசு சிறப்பு பள்ளி, அரசு உதவி பெறும் சிறப்பு பள்ளிகள், மாற்றுத்திறனாளிகள் துறையின் கீழ் அங்கீகாரம் பெற்று நடத்தப்படும் சிறப்பு பள்ளி மாணவ, மாணவியருக்கான போட்டி நடத்தப்பட்டது. இதில், 10 பள்ளிகளில் படிக்கும், 240 பேர் போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளனர்.மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலம், 2023-24ல், 8,260 மாற்றுத்திறனாளிகளுக்கு, 18.15 கோடி ரூபாய் மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, 42 பேருக்கு நியமன ஆணை வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு பேசினார். தண்டுவடம் பாதிக்கப்பட்டோருக்கான பெட்ரோல் ஸ்கூட்டர், 2 மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம், மாநகராட்சி துணை மேயர் செல்வராஜ், இளநிலை மறுவாழ்வு அலுவலர் குழந்தைசாமி, நந்தா கல்வி நிறுவன தலைவர் சண்முகன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை