உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கொடுமுடி ரயில்வே ஸ்டேஷனில் கொலை செய்யப்பட்டவர் யார்?

கொடுமுடி ரயில்வே ஸ்டேஷனில் கொலை செய்யப்பட்டவர் யார்?

ஈரோடு: கொடுமுடி ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது பிளாட்பார்மில், கடந்த, 10ம் தேதி காலை, 50 வயது மதிக்கதக்க ஆண் கழுத்தில் கத்திக்குத்து காயத்துடன் இறந்து கிடந்தார். ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி பெருந்துறை மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. சந்தேக மரணம் என வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.இதுகுறித்து போலீசார் கூறியதாவது: இறந்து கிடந்த நபரின் கூர்மையான ஆயுதத்தால் ஒரே ஒரு குத்து விழுந்துள்ளது. அளவுக்கு அதிகமாக ரத்தம் வெளியேறியதால் இறந்துள்ளார். உடற்கூறு பரிசோதனையிலும் உறுதி செய்யப்பட்டுள்ளது. ௯ம் தேதி நள்ளிரவுக்கு பின் கொலை நடந்திருக்கலாம். தடயம் எதுவும் கிடைக்காதது அடுத்தக்கட்ட விசாரணையில் பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. இவ்வாறு கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ