மேலும் செய்திகள்
தி.மு.க.,இளைஞரணி பேச்சுப் போட்டி பயிற்சி
30-Sep-2024
ஈரோடு: தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு, விக்கிரவாண்-டியில் நேற்று நடந்தது. இதில் பங்கேற்க ஈரோடு தி.மு.க.,வை சேர்ந்த மாணவரணி, இளைஞரணியை சேர்ந்த பலர் சென்றிருப்ப-தாக கூறப்படுகிறது.இது தொடர்பாக, தி.மு.க., வாட்ஸ் ஆப் குழுவில், ஐ.டி.,விங்க் சார்பில் நேற்று ஒரு செய்தி உலா வந்தது. அதில், 'பகுதி கழக செயலாளர், வட்ட கழக செயலாளர் தகவலுக்காக, விஜய் கட்சி மாநாட்டுக்கு விக்கிரவாண்டி சென்ற நபர்கள் யார் யார் என்று வார்டு வாரியாக, எத்தனை நபர்கள் சென்றார்கள், எத்தனை வாக-னங்கள் சென்றது என தகவல் தெரிவிக்கவும்' என குறிப்பிடப்பட்-டுள்ளது.இதனிடையே அ.தி.மு.க.,வை சேர்ந்த மாணவரணி, இளைஞர-ணியை சேர்ந்தவர்களும், த.வெ.க., மாநாட்டுக்கு சென்றுள்ளனர். இதுகுறித்து கேட்டபோது, அக்கட்சி நிர்வாகிகள் மறுப்பு தெரி-வித்தனர்.
30-Sep-2024