உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / மொபட் மீது லாரி மோதி மனைவி பலி; கணவர் காயம்

மொபட் மீது லாரி மோதி மனைவி பலி; கணவர் காயம்

பெருந்துறை, கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரையை சேர்ந்தவர் கோவிந்தன், 50. இவரது மனைவி சிவசக்தி, 45. இருவரும் திருப்பூரில் தங்கி கட்டட வேலை செய்கின்றனர். நேற்று காலை, ஸ்கூட்டி மொபட்டில் கணவன், மனைவி இருவரும், சொந்த ஊரான ஊத்தங்கரைக்கு சென்றனர். பெருந்துறை, பெரியவேட்டுவபாளையம் பிரிவு அருகே வந்தபோது, அவ்வழியாக பின்னால் வந்த லாரி மோதியது. இதில் இருவரும் துாக்கி வீசப்பட்டு, பலத்த காயமடைந்தனர். இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியில் சிவசக்தி இறந்தார். கோவிந்தன் சிகிச்சை பெற்று வருகிறார். பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ