உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் குதித்த மனைவியும் காப்பாற்ற முயன்ற கணவனும் பலி

கிணற்றில் குதித்த மனைவியும் காப்பாற்ற முயன்ற கணவனும் பலி

கோபிகணவருடன் ஏற்பட்ட வாக்குவாதத்தில் மனைவி கிணற்றில் குதித்தார். அவரை காப்பாற்ற கணவனும் கிணற்றில் குதித்தார். இதில் இருவரும் பலியானது, சோகத்தை ஏற்படுத்தியது.ஈரோடு மாவட்டம் கோபி அருகேயுள்ள அரியப்பம்பாளையத்தை சேர்ந்தவர் சந்திரன், 23; கட்டட தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் பிரியதர்ஷினி, 19; இவர்கள், 2024ல் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். கோவில் விழாவுக்காக பெற்றோர் வீட்டுக்கு பிரியதர்ஷினி சென்றார். மனைவியை அழைத்து வர மாமனார் வீட்டுக்கு, சந்திரன் நேற்று காலை, 7:20 மணிக்கு சென்றார். திருவிழாவுக்கு வராதது குறித்து பிரியதர்ஷினி கேட்டதில், இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. பேசி கொண்டிருந்தபோதே, அருகேயிருந்த, 50 அடி ஆழ கிணற்றில் பிரியதர்ஷினி குதித்து விட்டார். மனைவியை காப்பாற்ற சந்திரனும் கிணற்றுக்குள் குதித்தார். தண்ணீரில் மூழ்கி இருவரும் தத்தளித்தனர். நீரில் மூழ்கி பலியாகினர். சத்தியமங்கலம் தீயணைப்பு துறையினர் இருவரையும் சடலமாக மீட்டனர். பிரியதர்ஷினியின் தாய் ரேணுகா கொடுத்த புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர். வாக்குவாதத்தால் தம்பதியர், கிணற்றில் குதித்து இறந்ததாக போலீசார் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை