உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / அந்தியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., காரை வழிமறித்த காட்டு யானை

அந்தியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., காரை வழிமறித்த காட்டு யானை

அந்தியூர்:பர்கூர் மலைப்பகுதியில், நடமாடும் ரேஷன் கடை திறப்பு விழாவுக்கு சென்ற அந்தியூர் தி.மு.க., - எம்.எல்.ஏ., வெங்கடாசலம் சென்ற காரை வழிமறித்த ஒற்றை யானையால் பரபரப்பு ஏற்பட்டது. ஈரோடு மாவட்டம், அந்தியூர் அருகே பர்கூர் மலைப்பகுதியின் கிழக்கு மலையில், ஒந்தனை, பந்தலிபோடு உள்ளிட்ட, 15 இடங்களில் நேற்று நடமாடும் ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது. இந்நிகழ்ச்சியில், அந்தியூர் எம்.எல்.ஏ., வெங்கடாசலம் பங்கேற்றார். கிழக்கு மலையில் திறப்புவிழா நிகழ்ச்சியை முடித்துவிட்டு, நேற்று மதியம் மேற்கு மலைக்கு சென்றனர். தொல்லி பிரிவு என்ற இடத்தில் சென்று கொண்டிருந்த போது, திடீரென காட்டிலிருந்து வெளியேறிய ஒற்றை ஆண் யானை, வெங்கடாசலம் சென்ற காரை வழிமறித்து நின்றது. பதற்றமடைந்த டிரைவர், காரை பின்னோக்கி சிறிது துாரம் நகர்த்தி சென்று நிறுத்தினார். அதன் பின், எம்.எல்.ஏ.,வுடன் வந்த அப்பகுதி மக்கள், யானையை சத்தம் போட்டு காட்டுக்குள் விரட்டினர். 20 நிமிடங்களுக்கு மேலாக, அப்பகுதியில் சாலையோரம் நின்று கொண்டு பயம் காட்டிய யானையால் பரபரப்பு ஏற்பட்டது. தொடர்ந்து, மேற்கு மலையில் நடமாடும் ரேஷன் கடைகளை, வெங்கடாசலம் திறந்து வைத்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை