உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / காட்டாற்று வெள்ளம்: டிராக்டரை இழுத்து சென்றது

காட்டாற்று வெள்ளம்: டிராக்டரை இழுத்து சென்றது

சத்தியமங்கலம் : கடம்பூர் அருகே, டிராக்டரை காட்டற்று வெள்ளம் இழுத்து சென்றது.சத்தியமங்கலம், கடம்பூர் மலை பகுதியை அடுத்த மாக்கம்பாளையம் மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் உள்ள குரும்பூர் பள்ளம், சக்கரை பள்ளம் ஆகிய இரண்டு காட்டாறுகள் குறுக்கே ஓடுகிறது. நேற்று முன்தினம் வனப்பகுதியில் பெய்த கன மழையால், சக்கரை பள்ளத்தில் வெள்ள பெருக்கு ஏற்பட்டது. அப்போது அந்த வழியாக சென்ற அரசு பஸ், குரும்பூர் பள்ளத்தை கடந்து சக்கரை பள்ளம் வரை சென்று பயணிகளை இறக்கி விட்டு சென்றது.அப்போது மலை கிராம மக்கள் கயிறு கட்டி ஆபத்தை உணராமல் காட்டாற்றை கடந்து சென்றனர். இந்நிலையில் நேற்று மாலை, கட்டுமான பணிக்காக டிராக்டர் டிரைவர் குரும்பூர் பள்ளத்தை கடக்க முயற்சி செய்தார். மழை வெள்ளம் அதிகரித்ததால், டிராக்டரை பாதி துாரம் இழுத்து சென்றது. அப்போது சமார்த்தியமாக டிரைவர் செயல்பட்டு பள்ளத்தை கடந்து சென்றார். தற்போது இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வைரலாகி வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை