மேலும் செய்திகள்
சொத்தை அபகரித்ததாக மகன் மீது தந்தை புகார்
12-Sep-2025
ஈரோடு :என் குழந்தைக்கும், எனக்கும் பாதுகாப்பு அளித்து கணவரின் சொத்துகளை பெற்று தர வேண்டும் என, கணவனை இழந்த இளம் பெண் ஈரோடு எஸ்.பி.,யிடம் புகார் மனு அளித்தார். ஈரோடு, வேலாம்பாளையம் கண்டிக்காட்டு வலசு இந்திரா நகரை சேர்ந்தவர் சிவரஞ்சனி, 23. இவர் நேற்று ஈரோடு எஸ்.பி.,யிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: எனக்கு திருமணமாகி ஐந்து ஆண்டுகளாகிறது. மூன்று வயதில் பெண் குழந்தை உள்ளது. என் கணவர் வெள்ளியங்கிரி மது பழக்கத்தால் இறந்தார். மது பழக்கத்தை மறைத்து எனக்கு திருமணம் செய்து வைத்தனர். என் கணவரின் சொத்துகளை மாமியார் வெண்ணிலா, கணவரின் சகோதரர் ஹரிபிரசாத் அனுபவித்து வருகின்றனர். என் கணவரின் எல்.ஐ.சி., தொகையையும் இருவரும் எடுத்து கொண்டனர்.என்னையும், குழந்தையையும் வீட்டை விட்டு விரட்டினர். என் பெற்றோர் தயவில் இருக்கிறேன். சொத்து குறித்து கேட்டால் மிரட்டுகின்றனர். எனக்கு சேர வேண்டிய சொத்துகளை கிடைக்க செய்ய வேண்டும். மேலும் எனக்கும், குழந்தைக்கும் பாதுகாப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
12-Sep-2025