உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / கிணற்றில் மிதந்த பெண் சடலம்

கிணற்றில் மிதந்த பெண் சடலம்

நம்பியூர், நம்பியூர் அருகே கோட்டுப்புள்ளம்பாளையம், குருமந்துார்மேடு, அலங்கியம் ரேஷன் கடை அருகில் பொது கிணறு உள்ளது. கிணற்றில் பெண் பிணம் மிதப்பதாக நம்பியூர் போலீசருக்கு நேற்று தகவல் சென்றது. நம்பியூர் தீயணைப்பு நிலைய வீரர்கள் உதவியுடன் சடலத்தை மீட்டு, கோபி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், தற்கொலை செய்து கொண்டாரா, கொலை செய்து வீசப்பட்டாரா என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி