பெண்கள் விழிப்புணர்வு நிகழ்ச்சி
ஈரோடு, ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா சாய்ஸ்ரீ தலைமையில், போலீசார், ரயில்வே ஸ்டேஷனில் ரயில் பயணிகளுக்கும், ஈரோடு கலை அறிவியல் கல்லுாரி மாணவிகளுக்கும், பெண்கள் பாதுகாப்பு குழு தொடர்பாக விழிப்புணர்வை ஏற்படுத்தினர். ரzzயில் பயணத்தின் போது ஏதாவது அசவுகரியம் ஏற்பட்டால் உடனடியாக, 1512, 181, 139, 1091 என்ற எண்களில் அழைக்க வேண்டும். பெண்கள் பாதுகாப்பு தொடர்பாக விழிப்புணர்வு பிரசுரங்கள் அளிக்கப்பட்டது. விழிப்புணர்வு குறும்படங்கள் காட்டப்பட்டது. தற்காப்பிற்கு தேவையான பொருட்களை உடன் வைத்திருக்க அறிவுறுத்தப்பட்டது.