உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பாம்பு கடித்து தொழிலாளி சாவு

பாம்பு கடித்து தொழிலாளி சாவு

சத்தியமங்கலம், கடம்பூர் அடுத்த கோட்டமாளம் வெள்ளை தொட்டியை சேர்ந்தவர் ஆலுமலை, 20, தொழிலாளி. நேற்று அதிகாலை துாங்கி கொண்டிருந்த போது, ஏதோ கடித்தது போல் இருந்ததால் எழுந்தார். அப்போது கட்டு விரியன் பாம்பு ஊர்ந்து சென்றது. பின்பு அவரை மீட்டு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் முதலுதவி அளித்து, மேல் சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர், வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தார்.கடம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !