உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலி

டூவீலர் மீது கார் மோதிய விபத்தில் தொழிலாளி பலி

காங்கேயம், திருப்பூர் மாவட்டம், காங்கேயம் பங்களாபுதுார் ரோடு பகுதியை சேர்ந்த விஸ்வநாதன், 33, தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு, 10:30 மணிக்கு, காங்கேயம் - கோவை ரோடு அகஸ்திலிங்கம்பாளையம் பிரிவு அருகே, கடைவீதி வருவதற்காக தனது கிரக்ஸ் வாகனத்தில் சென்றுள்ளார். அப்போது, கோவையில் இருந்து கும்பகோணம் சென்ற எடியாஸ் கார், விஸ்வநாதன் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அவரை மீட்டு, காங்கேயம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், விஸ்வநாதன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.கார் ஓட்டி வந்த அபிராம், 21, என்பவர் மீது காங்கேயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை