ரயில் மோதி தொழிலாளி பலி
ஈரோடு:ரயில் பாதையை கவனக்குறைவாக கடக்க முயன்ற, தறி பட்டறை தொழிலாளி, ரயில் மோதி பலியானார். மாவெலிபாளையம் அருகே, 50 வயது மதிக்கதக்க ஆண் உடல், ரயில் பாதையில் கிடப்பதாக ஈரோடு ரயில்வே போலீசாருக்கு கடந்த, 28 இரவு தகவல் வந்தது.ஈரோடு ரயில்வே போலீசார் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு பெருந்துறை மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் இறந்தது சேலம் ஆட்டையாம்பட்டியை சேர்ந்த தறி பட்டறை தொழிலாளி கோபால், 46, என தெரிந்தது.இவருக்கு திருமணமாகி ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். வேலைக்கு சென்று வருவதாக கூறி, 28ல் வீட்டில் இருந்து கிளம்பி சென்றுள்ளார்.இந்நிலையில் கவனக்குறைவாக, ரயில் பாதையை கடக்க முற்பட்டபோது அவ்வழியாக வந்த ரயில் மோதியதில் உடல் நசுங்கி அதே இடத்தில் பலியானார். ஈரோடு ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.