உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / தொழிலாளி விபரீத முடிவு

தொழிலாளி விபரீத முடிவு

தொழிலாளி விபரீத முடிவுடி.என்.பாளையம், டிச. 22- -டி.என்.பாளையத்தை அடுத்த கள்ளிப்பட்டி போஸ் வீதியை சேர்ந்த கருப்புசாமி மகன் ஐயப்பன், 26; கட்டட தொழிலாளி. திருமணமாகாத நிலையில் பெற்றோருடன் வசித்தார். குடிப்பழக்கம் இருந்த நிலையில், சபரிமலை கோவிலுக்கு மாலை அணிந்து சென்று வந்தார். நேற்று முன்தினம் வேலைக்கு சென்றவர் சாப்பிட்டு விட்டு வழக்கம்போல் வீட்டில் உறங்க சென்றார். நேற்று காலை வெகுநேரமாகியும் எழவில்லை. இதனால் கருப்புசாமி சென்று பார்த்தபோது, வீட்டு விட்டத்தில் சேலையால் துாக்கிட்ட நிலையில் ஐய்யப்பன் தொங்கினார். கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் ஏற்கனவே இறந்து விட்டது தெரிந்தது. பங்களாப்புதுார் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி