உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ஒர்க் ஷாப்பில் திருடியவர் கைது

ஒர்க் ஷாப்பில் திருடியவர் கைது

கோபி, கோபி அருகே நாகதேவன்பாளையத்தை சேர்ந்தவர் சண்முகம், 62; அதே பகுதியில் ஸ்டீல் ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். நேற்று காலை சென்று பார்த்தபோது, கடை முன் வைத்திருந்த கடப்பாரை, முறுக்கு கம்பி உள்ளிட்ட இரும்பு பொருள் மாயமாகி இருந்தது. சந்தேகமடைந்து அப்பகுதி பஸ் ஸ்டாப்புக்கு சென்றபோது, அங்கு நின்றிருந்த இருவர் தாங்கள் கையில் வைத்திருந்த சாக்கு மூட்டையை வீசி விட்டு ஓடினர். ஒருவரை துரத்தி பிடித்தார். அதே பகுதியை சேர்ந்த ராஜா, 19, என்பது தெரிந்தது. தப்பியவர் அதே பகுதியை சேர்ந்த கார்த்திகேயன், 25, என தெரியவந்தது. சண்முகம் புகாரின்படி, ராஜாவை சிறுவலுார் போலீசார் கைது செய்தனர். கார்த்திகேயனை தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை