உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / ரூ.5 கோடிக்கு நுால்கள் விற்பனை

ரூ.5 கோடிக்கு நுால்கள் விற்பனை

ஈரோடு: மக்கள் சிந்தனை பேரவை மற்றும் அரசு சார்பில், ஈரோட்டில் புத்-தகத்திருவிழா கடந்த, 1ம் தேதி தொடங்கி, நேற்று வரை நடந்-தது. நிறைவு நாளான நேற்று நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் மக்கள் சிந்தனை பேரவை தலைவர் ஸ்டாலின் குணசேகரன் வர-வேற்றார். கலெக்டர் கந்தசாமி, நிருபர்களிடம் கூறியதாவது:ஈரோடு புத்தகத்திருவிழா, 230 அரங்குகளுடன் நடந்தது. இங்கு, 200 நுால்கள் வெளியிடப்பட்டது. இதில் நான் எழுதிய வெண்பா நுாலும் வெளியிடப்பட்டது. 12 நாட்களில் ஐந்து லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வந்தனர். 5 கோடி ரூபாய்க்கு மேலான நுால்களை வாங்கி சென்றுள்ளனர்.மாலை நேரத்தில் தினமும் நடந்த சிந்தனை அரங்கிலும், பல்-வேறு படைப்பாளர்கள் பேசினர். ஏராளமான ஆர்வலர்கள் பங்-கேற்றது பெருமைக்குரியது. இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி