பைக் மீது லாரி மோதி வாலிபர் உயிரிழப்பு
பெருந்துறை, அரச்சலுார் அடுத்த பள்ளியூத்தை சேர்ந்தவர் அருண்பிரசாத், 32. இவர், பெருந்துறை சிப்காட்டிலுள்ள தனியார் நிறுவனத்தில், வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் மாலை, வேலை முடிந்து தனது பைக்கில் வீட்டுக்கு திரும்பி சென்றார். பெருந்துறை அருகே வந்தபோது, பின்னால் வந்த கன்டெய்னர் லாரி பைக் மீது மோதியது. இதில் பலத்த காயமடைந்த அருண்பிரசாத்தை, அக்கம் பக்கத்தினர் மீட்டு, பெருந்துறை அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இறந்தார்.பெருந்துறை போலீசார் விசாரித்து வருகின்றனர்.