உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / ஈரோடு / பைக்குகள் மோதி வாலிபர் பலி

பைக்குகள் மோதி வாலிபர் பலி

ஈரோடு, ஈரோடு வள்ளிபுரத்தான் பாளையத்தை சேர்ந்த இளங்கோ மகன் சந்திரசேகர், 31. இவர் மனைவி சவுமியா, 27. இவர்கள் மகன் சர்வேஸ், 6. ஈரோடு சூரம்பட்டியில் நடக்கும் கிரகபிரவேசத்தில் பங்கேற்க, ஸ்பிளண்டர் பிளஸ் பைக்கில் மகன் சர்வேசுடன் நேற்று காலை, 6:30 மணியளவில் சென்றார். பின்னால் சவுமியா ஸ்கூட்டியில் சென்றார். ஈரோடு திண்டல் ரிங்ரோடு வள்ளிபுரத்தான் பாளையம் பிரிவு அருகே சென்ற போது, எதிரே வந்த கே.டி.எம், பைக் சந்திரசேகர் வந்த பைக் மீது மோதியது. இதில் பைக்கின் முன்புறம் அமர்ந்து இருந்த, சர்வேஸ் துாக்கி வீசப்பட்டு கீழே விழுந்தார்.பைக் மோதியதில் சந்திரசேகர் தலையில் பலத்த ரத்த காயம் ஏற்பட்டு அதே இடத்தில் பலியானார். ஈரோடு தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சந்திரசேகர் உடல் பிரேத பரிசோதனைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. கே.டி.எம். பைக்கில் வந்த நபர் யார் என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை