உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தாய், மகளை தாக்கிய 2 பேர் கைது

தாய், மகளை தாக்கிய 2 பேர் கைது

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே முன்விரோத தகராறில் தாய், மகளை தாக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி அடுத்த தென்கீரனுார் கிராமத்தை சேர்ந்தவர் ராகவன் மகள் சரண்யா,23; அதே ஊரைச் சேர்ந்தவர் மதுரைமுத்து மகன் இளையராஜா,35. இரு குடும்பத்தினர் இடையே இடம் சம்மந்தமாக தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 5ம் தேதி இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினர் ஏழுமலை, ராணி, மதுரைமுத்து மகன் கண்ணன்,19, ஆகியோர் சேர்ந்து சரண்யாவுக்கு சொந்தமான சிமென்ட் சீட் மாட்டுகொட்டகையை உடைத்து சேதப்படுத்தினர்.இதை தட்டிக் கேட்ட சரண்யா மற்றும் அவரது தாய் சரசுவை 4 பேரும் சேர்ந்து தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனர். இது குறித்த புகாரின் பேரில் அவர்கள் நால்வர் மீதும் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்கு பதிந்து இளையராஜா, கண்ணன் ஆகியோரை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ