உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 3 பேர் டிஸ்சார்ஜ்

கள்ளச்சாராயம் குடித்தவர்களில் மேலும் 3 பேர் டிஸ்சார்ஜ்

கள்ளக்குறிச்சி, : கள்ளச்சாராயம் குடித்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களில் நேற்று மூவர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர்.கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்த 229 பேர் பாதிக்கப்பட்டனர். அனைவரும் கள்ளக்குறிச்சி, சேலம் விழுப்புரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைகள் மற்றும் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் நேற்று முன்தினம் வரை 65 பேர் இறந்தனர். தொடர் சிகிச்சையில் குணமடைந்த 145 பேர் 'டிஸ்சார்ஜ்' செய்யப்பட்டனர். 19 பேர் மட்டும் மருத்துவமனைகளில் தொடர் சிகிச்சை பெற்று வந்தனர்.அவர்களில் நேற்று கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் 2 பேர், சேலம் அரசு மருத்துவமனையில் ஒருவர் என 3 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். தற்போது சேலத்தில் 8 பேர், ஜிப்மரில் 6 பேர் மற்றும் கள்ளக்குறிச்சியில் 2 பேர் என மொத்தம் 16 சிகிச்சை பெற்று வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை