மணல் கடத்திய 3 பேர் கைது
சங்கராபுரம்: சங்கராபுரம் அருகே ஆற்றில் மணல் கடத்திய 3 பேரை போலீசார் கைது செய்து ஜே.சி.பி., டிப்பர் லாரி மற்றும் டிராக்டரை பறிமுதல் செய்தனர்.சங்கராபுரம் சப் இன்ஸ்பெக்டர் சத்தியசீலன் பழையனுர் கிராமத்தில் மணி ஆற்றில் நேற்று மாலை மணல் கடத்தல் தடுப்பு சோதனை மேற்கொண்டார். அப்போது ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த பழையனுார் கிருஷ்ணமுர்த்தி, 45; வெங்கடேசன் மகன் மனோஜ் பிரபாகர், 23; மேல்சிறுவளுர் அப்துல் ரசாக் மகன் சம்சுதின், 39; ஆகியோரை கைது செய்தனர்.மேலும், மணல் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு டிப்பர் லாரி, ஒரு டிராக்டர், ஒரு ஜே.சி.பி., இயந்திரம் மற்றும் ஒன்றரை யூனிட் மணல் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.