உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கவரிங் நகையை தங்கம் என விற்க முயன்ற கர்நாடகாவை சேர்ந்த பெண் உள்ளிட்ட 5 பேர் கைது சங்கராபுரத்தில் பரபரப்பு

கவரிங் நகையை தங்கம் என விற்க முயன்ற கர்நாடகாவை சேர்ந்த பெண் உள்ளிட்ட 5 பேர் கைது சங்கராபுரத்தில் பரபரப்பு

சங்கராபுரம்: கவரிங் நகையை தங்க நகை எனக்கூறி விற்க முயன்ற கர்நாடகாவை சேர்ந்த பெண் உள்ளிட்ட 5 பேரை போலீசார் கைது செய்தனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் பஸ் நிலையம் அருகே காய்கறி கடை நடத்தி வருபவர் பார்த்திபன், 45; இவர், நேற்று காலை 9:00 மணியளவில் கடையில் வியாபாரம் செய்து கொண்டிருந்தார்.அப்போது கடைக்கு வந்த 5 பேர், தாங்கள் கடந்த மாதம் பெங்களூருவில் ஒரு வீட்டை இடித்தபோது தங்கப் புதையல் கிடைத்தது. அதனை விற்க வந்துள்ளதாக கூறி, அவர்கள் வைத்திருந்த 2 கிலோ எடையுள்ள கொத்தமல்லி மாலையை காண்பித்தனர். சந்தேகமிருந்தால் பரிசோதித்து பார்த்துக் கொள்ளுமாறு, கொத்தமல்லி மாலையில் இருந்து ஒரு மணியை எடுத்து கொடுத்தனர்.அதனை வாங்கிப் பார்த்த பார்த்திபன், 5 பேரிடமும் பெயர், முகவரியை எழுதி தருமாறு கேட்டார். உடன் அவர் அங்கிருந்து தப்பிச் செல்ல முயன்றனர். அவர்களை பொதுமக்கள் உதவியுடன் மடக்கி பிடித்து சங்கராபுரம் போலீசாரிடம் ஒப்படைத்தனர்.பிடிபட்டவர்கள் வைத்திருந்த நகையை போலீசார் கைப்பற்றி சோதனை செய்ததில், அது கவரிங் நகை என்பது தெரிய வந்தது. விசாரணையில், அவர்கள் கர்நாடகா மாநிலம் மாண்டியாவை சேர்ந்த துபாரம் மகன் வீரு,23; தனா மகன் பாலு,34; கிருஷ்ணராஜசாகரை சேர்ந்த தேவிலால் மகன் கல்வா,30; சீரங்கபட்டிணத்தை சேர்ந்த சதகவா,53; பாபுலால் மனைவி லட்சுமி,55; என்பது தெரிய வந்தது.இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, 5 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை