உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பைக் வாங்கியதில் தகராறு விஷம் குடித்தவர் சாவு

பைக் வாங்கியதில் தகராறு விஷம் குடித்தவர் சாவு

ரிஷிவந்தியம் : கள்ளக்குறிச்சி அடுத்த அந்தியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தங்கமணி மகன் கிேஷார், 20; தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார். இவர், கள்ளக்குறிச்சியைச் சேர்ந்த அதிபன் என்பவர் உதவியுடன், தனியார் பைனான்ஸ் மூலம் 65 ஆயிரம் ரூபாய்க்கு ேஹாண்டா ைஷன் பைக் வாங்கியுள்ளார்.கடந்த 23ம் தேதி முதல் தவணை தொகையை கிேஷார் செலுத்தியுள்ளார். தொடர்ந்து, 26 மற்றும் 27ம் தேதி கிேஷாரை வெள்ளை தாளில் கையெழுத்து போடுமாறு அதிபன் கேட்டுள்ளார். அதற்கு மறுப்பு தெரிவித்ததால் கிேஷாரை ஆபாசமாக திட்டியுள்ளார்.இதனால் மனமுடைந்த கிேஷார் கடந்த 27ம் தேதி மையனுார் எல்லையில் உள்ள வனப்பகுதியில் பால்டாயில் குடித்தார். உடன், சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ