| ADDED : ஜூலை 02, 2024 06:22 AM
ரிஷிவந்தியம்: எகால் கிராமத்தில் களைக்கொல்லி டப்பாவில் மது ஊற்றி குடித்த நபர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.திருவள்ளூர் மாவட்டம், எண்ணுாரை சேர்ந்தவர் சுந்தர்ராஜன் மகன் நாகராஜ்,37; கூலித்தொழிலாளி. இவர், கோயம்பேடு மார்க்கெட் பகுதியில் பணிபுரிந்த போது, கள்ளக்குறிச்சி மாவட்டம், எகால் கிராமத்தை சேர்ந்த தேவராஜ் என்பவருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த மாதம் 19ம் தேதி எகால் கிராமத்தில் நடந்த திருவிழாவில் பங்கேற்க தேவராஜ், நாகராஜ் வந்துள்ளனர். கடந்த 21ம் தேதி இரவு நாகராஜ் மது அருந்த விளைநில பகுதிக்கு சென்றுள்ளார். அப்போது 'டம்பளர்' இல்லாததால், நாகராஜ் அருகில் இருந்த களைக்கொல்லி டப்பாவில் மது ஊற்றி குடித்துள்ளார். உடன், சிறிது நேரத்திற்கு பின் நாகராஜிற்கு வயிற்று வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை சங்கராபுரம் அரசு மருத்துவமனைக்கும், மேல்சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் நாகராஜ் உயிரிழந்தார்.புகாரின் பேரில் பகண்டைகூட்ரோடு போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.