உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வெற்றியை பறித்த பா.ம.க.,

கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வெற்றியை பறித்த பா.ம.க.,

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் அ.தி.மு.க., வெற்றியை பா.ம.க., பறித்தது.கடந்த சட்டசபை தேர்தலின் போது தி.மு.க., தலைமையிலான கூட்டணியில் இருந்த காங்., வி.சி., ம.தி.மு.க., இ.கம்யூ., மா.கம்யூ., த.வா.க., ம.ம.க., கொ.ம.தே.க., கட்சிகள், நடந்து முடிந்த லோக்சபா தேர்தலிலும் அங்கம் வகித்தன. ஆனால், அ.தி.மு.க., கூட்டணியில் தே.மு.தி.க., புரட்சி பாரதம், எஸ்.டி.பி.ஐ., ஆகிய கட்சிகள் மட்டுமே இடம் பெற்றன. பா.ஜ., கட்சியுடனான நட்பை அ.தி.மு.க., முறித்து கொண்டது. மேலும், பா.ம.க., வை இழுக்கும் முயற்சியில் அ.தி.மு.க., தோல்வியடைந்தது. இதனால், தி.மு.க., வின் கூட்டணி பலம், அ.தி.மு.க., வில் இல்லை. அ.தி.மு.க., கூட்டணியில் இருந்த விலகிய பா.ஜ., தனது தலைமையில் புதிய கூட்டணியை உருவாக்கியது. அதில், பா.ம.க., அ.ம.மு.க., ஐ.ஜே.கே., ஓ.பி.எஸ்., அணி, புதிய நீதி கட்சி ஆகியவை இருந்தன.பா.ஜ., தலைமையிலான கூட்டணியில் கள்ளக்குறிச்சி தொகுதி பா.ம.க., விற்கு ஒதுக்கப்பட்டது. இதனால், தி.மு.க., அ.தி.மு.க., பா.ம.க., கட்சிகள் கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் மோதியது. குறிப்பாக, மூன்று கட்சியிலும் உடையார் சமூகத்தை சேர்ந்த வேட்பாளர்களே போட்டியிட்டனர். கள்ளக்குறிச்சி லோக்சபா தொகுதியில் உள்ள 6 சட்டசபை தொகுதிகளில், 4 தொகுதி அ.தி.மு.க., வசமும், 2 தொகுதி தி.மு.க., வசமும் உள்ளது. இதனால் அ.தி.மு.க., வெற்றி பெறுவதற்கான வாய்ப்பு அதிகமாக இருப்பதாக கருதப்பட்ட நிலையில், அதை தகர்க்கும் வகையில் பா.ம.க.,வின் ஓட்டு வங்கி இருந்தது.தேர்தலில், தி.மு.க., மலையரசன் 5,61,589 ஓட்டுக்களும், அ.தி.மு.க., குமரகுரு 5,07,805 ஓட்டுக்களும், பா.ம.க., தேவதாஸ் 71,290 ஓட்டுக்களும் பெற்றனர். 53,784 ஓட்டுக்கள் வித்தியாசத்தில் தி.மு.க., மலையரசன் வெற்றி பெற்றார். அ.தி.மு.க., கூட்டணியில் பா.ம.க., இடம் பெற்றிருந்தால், அ.தி.மு.க., வேட்பாளர் குமரகுரு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருந்திருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி