உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விவசாய டிராக்டர் திருட்டு; போலீசில் புகார்

விவசாய டிராக்டர் திருட்டு; போலீசில் புகார்

திருக்கோவிலூர் : மணலூர்பேட்டை அருகே விவசாய நிலத்தில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். மணலூர்பேட்டை அடுத்த மேலந்தல், வாழவச்சானூர் மெயின் ரோட்டில் மணி, 60; என்பவருக்கு சொந்தமான நிலம் உள்ளது. நேற்று முன்தினம் மாலை 7:00 மணி அளவில் உழவு பணியை முடித்துவிட்டு டிராக்டரை ரொட்டேட்டருடன் நிலத்தில் நிறுத்திவிட்டு வீட்டிற்கு சென்று விட்டார். நேற்று காலை 6:00 வயலுக்கு சென்று பார்த்தபோது, டிராக்டரை ரொடேட்டருடன் காணவில்லை. இதன் மதிப்பு ரூ. 3 லட்சமாகும். இது குறித்து மணி கொடுத்த புகாரின் பேரில் மணலூர்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை