உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

தமிழ்ச் செம்மல் விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2024ம் ஆண்டிற்கான தமிழ்ச் செம்மல் விருதுக்கு தமிழ் ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:தமிழக அரசு சார்பில் 'தமிழ்ச் செம்மல்' என்ற விருது தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறுபவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் பரிசும், தகுதியுரையும் வழங்கப்பட்டு வருகிறது.இந்த விருதுக்குரிய விண்ணப்ப படிவத்தினை தமிழ் வளர்ச்சித் துறையின் www.tamilvalarchithurai.tn.gov.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் நேரில் பெற்றுக் கொள்ளலாம்.தமிழ்ச் செம்மல் விருது வேண்டுவோர் தமிழ் வளர்ச்சித் துறையால் வழங்கப்படும் விருதுகள் ஏதும் இதற்கு முன் பெற்றிருக்கக் கூடாது. அகவை முதிர்ந்த தமிழறிஞர், எல்லைக் காவலர், தமிழறிஞர் நிதியுதவி பெற்று வருபவராக இருக்கக் கூடாது.கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்ச் செம்மல் விருதிற்கு விண்ணப்பிப்பவர்கள் தன்விபர குறிப்பு, நிழற்படம் இரண்டு, அவர்கள் ஆற்றிய தமிழ்ப்பணி ஆகிய விவரங்களுடன் விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள தமிழ் வளர்ச்சி உதவி இயக்குனர் அலுவலகத்தில் வரும் ஆகஸ்ட் 10ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம். இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை