உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மாணவியருக்கு பாராட்டு விழா

மாணவியருக்கு பாராட்டு விழா

விழுப்புரம் : பாண்டலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் அதிக மதிப்பெண்கள் பெற்றமாணவியருக்கு பாராட்டு விழா நடந்தது.பள்ளி தலைமை ஆசிரியை திருநீரைசெல்வி தலைமை தாங்கினார். பள்ளி தமிழ் ஆசிரியை கஸ்துாரி வரவேற்றார். உலக திருக்குறள் பேரவை மாவட்ட தலைவர் பாஸ்கரன் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்பு அரசு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியர் மற்றும் தமிழ் பாடத்தில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவியருக்கு கேடயம் மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். ஊராட்சி தலைவி பாப்பாத்தி நடராஜன் வாழ்த்துரை வழங்கினார்.அப்போது, பெற்றோர் ஆசிரியர் கழகம், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். ஆசிரியை அருணா நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ