உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

சிலம்பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா

மூங்கில்துறைப்பட்டு: மாநில அளவிலான சிலம் பம் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் கடந்த வாரம் மாநில அளவிலான சிலம்பம் போட்டி நடந்தது. இப்போட்டியில் மூங்கில்துறைப்பட்டு பகுதி மாணவர்கள் பங்கேற்று வெற்றி பெற்று, தேசிய அளவிலான போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு, நேற்று மூங்கில்துறைப்பட்டு தி.மு.க., சார்பில் பாராட்டு விழா நடந்தது.விழாவிற்கு, சங்கராபுரம் வடக்கு ஒன்றிய செயலாளர் அசோக்குமார் தலைமை தாங்கினார். சப் இன்ஸ்பெக்டர் சிவன்யா, துணைச் சேர்மன் அஞ்சலை, ஊராட்சி தலைவர் பரமசிவம் உட்பட பலர் பங்கேற்றனர். வெற்றி பெற்ற மாணவர்கள் கவுரவிக்கப்பட்டனர்.பயிற்சியாளர்கள் அண்ணாமலை, வின்சென்ட், விக்கி ஆகியோர் உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை