உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மருத்துவ அலுவலர் கிருபா தலைமை தாங்கினார். இளநிலை பூச்சியியல் உதவியாளர் சரவணன், நகராட்சி துப்புரவு அலுவலர் ரவீந்திரன், துப்புரவு ஆய்வாளர் சையத்காதர் முன்னிலை வகித்தனர்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் ரவி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட பூச்சிகள் வல்லுநர் சுப்ரமணியன் பேசுகையில், 'ஏடீஸ் என அழைக்கப்படம் கொசுவினால் டெங்கு காய்ச்சல் ஏற்படும். காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நோயாளியை கடித்த பிறகு, மற்றவர்களை கடிப்பதால் டெங்கு எளிதில் பரவும். இதை தடுக்க நமது வீட்டை சுற்றி தண்ணீர் தேங்கி நிற்காமல் பார்த்து கொள்வதுடன், வீட்டில் உள்ள சிமென்ட் தொட்டி, பிளாஸ்டிக் டிரம், பாத்திரங்கள் ஆகியவற்றை மூடி வைத்து உபயோகப்படுத்த வேண்டும்.தண்ணீர் தேங்கும் வகையில் உள்ள உரல், பிளாஸ்டிக் பொருள், டயர், தேங்காய் ஓடுகளை அப்புறப்படுத்த வேண்டும். காய்ச்சல் ஏற்பட்டால் தாமாக மருந்து வாங்கி உட்கொள்ளாமல், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மருத்துவரை அணுகி சிகிச்சை பெற வேண்டும்' என்றார்.தொடர்ந்து, டெங்கு காய்ச்சல் உறுதிமொழியேற்கப்பட்டது. இதில், சுகாதார ஆய்வாளர்கள் கவுதம், கவியரசன், விக்னேஷ்வரன், வசந்தன், பாலா, களப்பணியாளர் மகேஸ்வரி, ஆய்வக நுட்புநர் ஜெயந்தி, மருந்தாளுநர் சுதா, செவிலியர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை