மேலும் செய்திகள்
5 நாள் வேலை நடைமுறை வங்கி ஊழியர் ஆர்ப்பாட்டம்
15-Feb-2025
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி இந்தியன் வங்கி முன், மாவட்ட வங்கிகளின் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.மாவட்ட செயலாளர் கல்யாணசுந்தரம் தலைமை தாங்கினார். கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கத் தலைவர் முத்தையன் வரவேற்றார்.தேசிய வங்கி ஊழியர் கூட்டமைப்பை சேர்ந்த செல்லதுரை ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்தார்.ஆர்ப்பாட்டத்தில், காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஊழியர் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைள் வலியுறுத்தப்பட்டன.வங்கி தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு நிர்வாகிகள் ராதாகிருஷ்ணன், கிருஷ்ணன், கோபி, கருப்பன், சிவக்குமார் பங்கேற்றனர்.
15-Feb-2025