உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி

அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்றவர் பலி

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி பைக்கில் சென்றவர் இறந்தார்.சங்கராபுரம் அடுத்த விரியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி, 48; இவர் தனது நண்பர் ராமஜாபுரம் பகுதியைச் சேர்ந்த வஹாப், 42; இருவரும், சின்னசேலம் அடுத்த மேல்நாரியப்பனுார் திருவிழாவிற்கு பைக்கில் சென்று, நேற்று அதிகாலை 4:00 மணியளவில் வீடு திரும்பினர். பைக்கை வஹாப் ஓட்டினார்.தச்சூர் பஸ் நிறுத்தம் அருகே வந்தபோது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் பைக் மீது மோதி விட்டு நிற்காமல் சென்றது.இதில் படுகாயமடைந்த பழனி சம்பவ இடத்திலேயே இறந்தார். வகாப் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ