உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம் வழங்கல்

கல்லுாரி மாணவர்கள் ரத்த தானம் வழங்கல்

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் கலை அறிவியல் கல்லுாரி, விழுப்புரம் ஜங்ஷன் அரிமா சங்கம் சார்பில் கல்லுாரி வளாகத்தில் ரத்த தான முகாம் நடந்தது.கல்லுாரி முதல்வர் நாராயணசாமி வரவேற்றார். தலைவர் செல்வராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் சுப்ரமணியன், பொருளாளர் ஏழுமலை, துணைத்தலைவர் முஸ்டாக் அகமது, தாளாளர் பழனி ராஜ் முன்னிலை வகித்தனர்.விழுப்புரம் அரசு மருத்துவமனை டாக்டர் கணேஷ் தலைமையிலான மருத்துவ குழுவினர் மாணவர்கள் வழங்கிய 60 யூனிட் ரத்ததானம் பெற்றனர்.கல்லுாரி நிர்வாக அலுவலர் குமார் முகாமிற்கான ஏற்பாடுகளை செய்திருந்தார்.விழுப்புரம் ஜங்ஷன் அரிமா சங்கத் தலைவர் கோபு, முருகன், செயலாளர் தினகரன், நிர்வாகிகள் உட்பட பலர் பங்கேற்றனர்.கல்லுாரி துணை முதல்வர் மீனாட்சி நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







புதிய வீடியோ