உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / அடையாள எண் பதிவு விவசாயிகளுக்கு அழைப்பு

அடையாள எண் பதிவு விவசாயிகளுக்கு அழைப்பு

சங்கராபுரம்: சங்கராபுரம் வட்டார விவசாயிகள் வரும், 31,ம் தேதிக்குள் அடையாள எண் பெற வேளாண்மை உதவி இயக்குனர் ஆனந்தன் அழைப்பு விடுத்துள்ளார்.விவசாயிகளுக்கான அடையாள எண் பெற சங்கராபுரம் வட்டார கிராமங்களில் உள்ள இ சேவை மையங்களில் இலவசமாக பதிவு செய்யப்பட்டு வருகிறது. இந்த எண் இருந்தால் தான், வேளாண் பயிர்க்கடன், விவசாய இடு பொருட்கள், மழை மற்றும் வறட்சி நிவாரணம், மானிய உதவி உள்ளிட்ட உழவர் நல திட்டங்கள் பெற முடியும். இந்த எண் பெற வரும், 31,ம் தேதி கடைசி நாள். விவசாயிகள் சம்பந்தப்பட்ட இ சேவை மையங்களில் ஆதார் அட்டை, நிலப்பட்டா, ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட மொபைல் எடுத்து சென்று, பதிவு செய்ய வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை