மேலும் செய்திகள்
போக்குவரத்து விதி மீறல் 20 பேர் மீது வழக்கு
21-Feb-2025
சங்கராபுரம்: சங்கராபுரத்தில் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட, 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சங்கராபுரத்தில், வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுவது அதிகரித்து வருகிறது. இது குறித்து போலீசார் அவ்வப்போது, நடவடிக்கை மேற்கொண்டாலும், அத்துமீறல் தொடர்கதையாக உள்ளது. இந்நிலையில் நேற்று கடைவீதி மும்முனை சந்திப்பில், சப் இன்ஸ்பெக்டர் தனசேகரன் மற்றும் போலீசார் வாகன சோதனை மேற்கொண்டனர். அப்போது ஓட்டுனர் உரிமம், ெஹல்மெட், குடிபோதை, வேகம் உள்ளிட்ட பல்வேறு விதிமீறலில் ஈடுபட்ட, 15 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
21-Feb-2025