உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / பெண்ணிடம் செயின் பறிப்பு

பெண்ணிடம் செயின் பறிப்பு

உளுந்துார்பேட்டை : எலவனாசூர்கோட்டையில் துாங்கி பெண்ணிடம் செயினை பறித்துச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.எலவனாசூர்கோட்டை, புவனம்தோப்பு பகுதியைச் சேர்ந்தவர் கண்ணன் மனைவி கலைமகள், 34; இவர், நேற்று முன்தினம் இரவு வீட்டிற்கு வெளியே கட்டிலில் துாங்கிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர்கள் இருவர் கலைமகள் கழுத்தில் அணிந்திருந்த மூன்று சவரன் தாலிச் செயினை பறித்துக் கொண்டு தப்பியோடினர்.மேலும் மேலப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பெரியசாமி மகன் ராஜவேல், 26; சுலைமான் மகன் அசைக்கான், 39; ஆகியோரின் வீட்டின் பின்பக்க கதவை உடைத்து பணம், நகைகள் இல்லாததால் துணி மற்றும் பொருட்களை திருடிச் சென்றுள்ளனர்.அடுத்தடுத்து மர்ம நபர்கள் கைவரிசை காட்டிய சம்பவத்தால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். எலவனாசூர்கோட்டை போலீசார் மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை