உள்ளூர் செய்திகள்

தேர் திருவிழா

ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அடுத்த பாவந்துார் மாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்தது.விழா, கடந்த ஜூன் 28ம் தேதி பாரதம் ஆரம்பம் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, தினமும் காலை மற்றும் மாலையில் மூலவர், உற்சவர் சுவாமிகளுக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. கடந்த 11ம் தேதி காத்தவராயன், ஆரியமாலா சுவாமி திருக்கல்யாணமும், ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும் நடந்தது.நேற்று முன்தினம் நடந்த தீமிதி திருவிழாவில் திரளான மக்கள் தீ மிதித்து நேர்த்திக் கடன் செலுத்தினர். தொடர்ந்து, உற்சவர் மாரியம்மன் சுவாமியை தேரில் எழுந்தருளச் செய்து, பக்தர்கள் வடம் பிடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்