உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சோமண்டார்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

சோமண்டார்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம்

கள்ளக்குறிச்சி : சோமண்டார்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது.கள்ளக்குறிச்சி அடுத்த சோமண்டார்குடியில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. முகாமிற்கு உதயசூரியன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். தொடர்ந்து சம்மந்தப்பட்ட அரசு துறை அலுவலர்கள் மூலம் மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு அரசின் நலத்திட்ட உதவிகள் வழங்கினார். ஒன்றிய சேர்மன் அலமேலு ஆறுமுகம், தாசில்தார் சசிகலா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பி.டி.ஓ., பூமா வரவேற்றார்.முகாமில் தி.மு.க., மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், பி.டி.ஓ., செல்வகணேஷ், ஒன்றிய செயலாளர்கள் அரவிந்தன், ஆறுமுகம், ஒன்றிய சேர்மன்கள் திலகவதி நாகராஜன், ஒன்றிய துணை சேர்மன் அன்புமணிமாறன், ஒன்றிய கவுன்சிலர் லலிதா அரவிந்தன், நகர செயலாளர்கள் ஜெயவேல், செந்தில்குமார், துரைதாகப்பிள்ளை, இளைஞரணி துணை அமைப்பாளர் அருள் உட்பட பலர் பங்கேற்றனர். முகாமில், சோமண்டார்குடி, க.அலம்பளம், வன்னஞ்சூர், மாமனந்தல், மோகூர் கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கோரிக்கை மனுக்கள் அளித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ