உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / திறன் பயிற்சி திட்டங்கள் மூலம் பயன்பெற கலெக்டர் அழைப்பு

திறன் பயிற்சி திட்டங்கள் மூலம் பயன்பெற கலெக்டர் அழைப்பு

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கிராமப்புற இளைஞர்கள், திறன் பயிற்சித் திட்டங்களில் பயன்பெறலாம் என கலெக்டர் தெரிவித்துள்ளார்.கலெக்டர் பிரசாந்த் செய்திக்குறிப்பு:தீன்தயாள் உபாத்யாயகிராமின் கவுசல்ய யோஜனா திட்டத்தின்கீழ் 18 முதல் 35 வயதிற்குட்பட்ட கிராமப்புற இளைஞர்களுக்குத் தொழில் சார்ந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி, நிலையான வருமானம் ஈட்டும் வகையில் பயிற்சி வழங்கப் படுகிறது.இத்திட்டத்தில் செக்யூரிட்டி சூப்பர்வைசர், ரெஸ்டாரண்ட் கேட்பன், பெசிலிட்டி மேனேஜ்மென்ட் எக்சிகியூட்டிவ், ஆட்டோமோட்டிவ் வெங்டிங் டெக்னீசியன், ஸ்மார்ட்போன் அசெம்பிளி டெக்னீசியன், ஆட்டோமோட்டிவ் கேட் டெக்னீசியன், டெக்னிக்கல் சப்போர்ட் எக்சிகியூட்டிவ்-நான் வாய்ஸ், பீல்ட் டெக்னீசியன் கம்ப்யூட்டிங் அண்ட் பெரிபரல்ஸ், ரீடெய்ல் டிபார்ட்மென்ட்டல் மேனேஜர், டிரோன் சர்வீஸ் டெக்னீசியன் போன்ற எளிதில் வேலை வாய்ப்புபெற இயலும் பிரிவுகளில் பயிற்சி வழங்கப்பட்டு வேலை வாய்ப்பு ஏற்படுத்தப்படுகிறது.குறைந்தது 3 முதல் 6 மாதங்கள் கொண்ட பயிற்சிகள் உணவு, தங்குமிட வசதி, சீருடை, பயிற்சி உபகரணங்கள், கணினி பயிற்சியும் வழங்கப்படும். கட்டணம் இல்லை. பயிற்சி சான்றிதழ் வழங்கப்படும். பயிற்சிக்குப் பின் தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு ஏற்படுத்தி தரப்படும்.விருப்பமுள்ள இளைஞர்களுக்கு பயிற்சிக்கு ஏற்ப சில இடங்களில் அயல்நாடுகளிலும் வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரப்படுகிறது. எனவே, இத்திட்டத்தின் கீழ் பயிற்சி பெற விரும்பும் இளைஞர்கள் தங்கள் ஊராட்சிகளில் உள்ள சமுதாய வல்லுநர்கள் (வேலைவாய்ப்பு) மூலமாக தங்கள் வட்டாரத்தில் செயல்பட்டு வரும் வட்டார இயக்க மேலாண்மை அலுவலகத்தையோ அல்லது வட்டாரங்களில் பணிபுரியும் ஒருங்கிணைப்பாளர்களையோ அணுகி விபரங்களைப் பெற்று பயிற்சிகளில் சேர்ந்து பயனடையலாம்.எனவே, தகுதியும் விருப்பமும் உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த, இருபால் இளைஞர்கள் தங்களின் கல்வித் தகுதிற்கேற்ப விருப்பமான, தொழில் பிரிவைத் தேர்வு செய்து பயிற்சி பெற்று பயனடையலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை