நுாரோலை ஊராட்சி தலைவருக்கு கலெக்டர் ஊக்க தொகை வழங்கல்
ரிஷிவந்தியம்; உயிர்ம வேளாண்மையை 3 ஆண்டுகளுக்கு மேலாக கடைபிடித்த நுாரோலை ஊராட்சி தலைவருக்கு பாராட்டு சான்றிதழ், ஊக்கத் தொகையை கலெக்டர் வழங்கினார்.ரிஷிவந்தியம் அடுத்த நுாரோலை ஊராட்சி தலைவர் கிருஷ்ணபிரசாத் உயிர்ம வேளாண்மை எனப்படும் இயற்கை வேளாண்மை முறையை கடைபிடித்து பயிர் சாகுபடி செய்து வருகிறார்.தொடர்ந்து, 3 ஆண்டு களுக்கும் மேலாக இயற்கை வேளாண்மை கடைபிடித்து, உயர்ம நிலைக்கு உயர்வு அடைந்துள்ள விவசாயி கிருஷ்ணபிரசாத்தை பாராட்டி சான்றிதழும், 5000 ரூபாய் ஊக்கத்தொகையையும் கலெக்டர் பிரசாந்த் வழங்கினார்.வேளாண், தோட்டக்கலை துறை அதிகாரிகள் பலர் உடனிருந்தனர்.