மேலும் செய்திகள்
அரசு கலைக்கல்லுாரியில் ஊட்டச்சத்து திருவிழா
04-Sep-2024
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி கலை-அறிவியல் கல்லுாரியில் மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் பரிசு வழங்கினார்.கள்ளக்குறிச்சி அடுத்த சடையம்பட்டு அரசு கலை-அறிவியல் கல்லுாரியில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு போட்டிகள் நடந்தது. அதில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு கலெக்டர் பிரசாந்த் பாராட்டுச் சான்றிதழ்கள் பேசியதாவது: ஊட்டச்சத்து மாத விழா குறித்து விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி மாணவிகளுக்கு சிறுதானிய உணவு தயாரிக்கும் போட்டி, பாரம்பரிய உணவுப் பொருட்களை தயாரிக்கும் போட்டி, அடுப்பு இல்லாமல் ஊட்டச்சத்து நிறைந்த உணவு பொருட்களை தயாரிக்கும் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும், சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பாக மரம் நடுதல், மழைநீர் சேகரிப்பு மற்றும் அறுவடை செய்தல் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தும வகையில் கோலப்போட்டி மற்றும் ஓவியப் போட்டியும், ஆரோக்கிய வாழ்விற்கு அடிப்படை, நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற தலைப்பில் பேச்சுப் போட்டி மற்றும் கட்டுரைப் போட்டி நடத்தப்படுகிறது. நாட்டின் எதிர்காலமாக திகழ்கின்ற மாணவர்களுக்கு கல்வி தான் முன்னேற்றத்தை அளிக்கும். எனவே மாணவ, மாணவியர்கள் நன்றாக படித்து, உயர்கல்வி பெற்று, நல்ல வேலைவாய்ப்பு பெற்று வாழ்வில் முன்னேற வேண்டுமென கலெக்டர் பேசினார். நிகழ்ச்சியில் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி அலுவலர் செல்வி, அரசு கலை -அறிவியல் கல்லுாரி முதல்வர் முனியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
04-Sep-2024