உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / 12ம் தேதி ஜமாபந்தி துவக்கம்

12ம் தேதி ஜமாபந்தி துவக்கம்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வரும் 12ம் தேதி முதல் 28ம் தேதி வரை ஜமாபந்தி நிகழ்ச்சி நடக்கிறது.கலெக்டர் அலுவலக செய்திகுறிப்பு:கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் ஜமாபந்தி நிகழ்ச்சி வரும் 12ம் தேதி முதல் 28ம் தேதி வரை அரசு விடுமுறை மற்றும் சனி, ஞாயிறு ஆகிய நாட்களைத் தவிர்த்து பிற நாட்களில் நடக்கிறது.அதன்படி சின்னசேலம் தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் வரும் 12ம் தேதி முதல் 20ம் தேதி வரை நடக்கிறது. டி.ஆர்.ஓ., சத்தியநாராயணன் தலைமையில் வாணாபுரம் தாலுகா அலுவலகத்தில் 12 முதல் 24ம் தேதி வரை நடக்கிறது.சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் குப்புசாமி தலைமையில் கல்வராயன்மலை தாலுகாவில் வரும் 12 முதல் 18ம் தேதி வரை நடக்கிறது.மேலும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் கீதா தலைமையில் திருக்கோவிலுார் தாலுகாவில் வரும் 12 முதல் 21ம் தேதி வரையும், கலால் உதவி ஆணையர் சக்திவேல் தலைமையில் கள்ளக்குறிச்சி தாலுகாவில் வரும் 12 முதல் 24ம் தேதி வரையும் நடக்கிறது. அதேபோல் கள்ளக்குறிச்சி ஆர்.டி.ஓ., லுார்துசாமி தலைமையில் சங்கராபுரம் தாலுகாவில் வரும் 12 முதல் 18ம் தேதி வரையும், திருக்கோவிலுார் ஆர்.டி.ஓ., கண்ணன் தலைமையில் உளுந்துார்பேட்டை தாலுகாவில் வரும் 12 முதல் 28ம் தேதி வரையும் நடக்கிறது.எனவே வருவாய் தீர்வாயத்தில் (ஜமாபந்தி) பொதுமக்கள் சம்மந்தப்பட்ட தாலுகா அலுவலங்களில் தங்களது கோரிக்கை மனுக்களை அளித்து பயன்பெறலாம்.லோக்சபா தேர்தலையொட்டி நன்னடத்தை விதிமுறைகள் இருந்த காரணத்தினால் கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கள் கிழமை நடைபெற்று வந்த பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.தற்போது தேர்தல் நடத்தை விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்டதால் கலெக்டர் அலுவலகத்தில் வரும் 10ம் தேதி திங்கட் கிழமை பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் நடைபெறும்.மேலும், ஜமாபந்தி 12ம் தேதி துவங்க இருப்பதையொட்டி, கலெக்டர் அலுவலகத்தில் வாரம் தோறும் திங்கட்கிழமை நடைபெறும் பொதுமக்கள் குறைகேட்புக் கூட்டம் வரும் 24ம் தேதி நடைபெறாது. 10ம் தேதி மட்டும் ஒரு நாள் நடைபெறும்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்