உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / விநாயகர் கோவிலில் சிலை பிரதிஷ்டை

விநாயகர் கோவிலில் சிலை பிரதிஷ்டை

கள்ளக்குறிச்சி: அம்மகளத்துார் செல்வ விநாயகர் கோவிலில் 10ம் ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவையொட்டி புதிதாக உற்சவர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனையொட்டி சுவாமிக்கு சிறப்பு ஹோமம் நடத்தி, அபிஷேக ஆராதனைக்குப்பின், வெள்ளிக் கவசம் அணிவிக்கப்பட்டு, பூஜை நடந்தது. முரளி சுவாமிகள் மற்றும் வெங்கடேஷ் அய்யர் தலைமையிலான குழுவினர் வைபவங்களை நடத்தினர்.ஏற்பாடுகளை கோவில் பரம்பரை தர்மகர்த்தா ராமசாமி, கோவில் நிர்வாகிகள் செல்வாம்பாள், ஞானவேல், எழிலரசி, அவினாஷ், காமேஷ், இளங்கோவன், பச்சையம்மாள், கீர்த்தனா, சுபாஷினி, ராமமூர்த்தி, கண்ணன் செய்திருந்தனர்.நிகழ்ச்சியில் செந்தில்குமார் எம்.எல்.ஏ., அ.தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் ராஜேந்திரன், அய்யம்பெருமாள், கிருஷ்ணமூர்த்தி, ராஜசேகர், மாவட்ட அவைத் தலைவர் பச்சையாப்பிள்ளை.நகர செயலாளர் பாபு, மாவட்ட வழக்கறிஞரணி செயலாளர் சீனிவாசன், இளைஞர் பாசறை செயலாளர் வினோத், அம்மகளத்துார் ஊராட்சி தலைவர் சிவசக்தி அய்யப்பன்.சின்னசேலம் முன்னாள் துணைச் சேர்மன் பரிமளம், தொழிலதிபர் ராமலிங்கம், பா.ஜ., மாநில நிர்வாகிகள் அசோக்குமார், செல்வநாயகம், அருண்குமார் உட்பட பலர் பங்கேற்றனர். இரவு 8:00 மணிக்கு சுவாமி வீதியுலா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை