உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளச்சாராய வியாபாரிகள் கொலை வழக்கில் கைது

கள்ளச்சாராய வியாபாரிகள் கொலை வழக்கில் கைது

கள்ளக்குறிச்சி: மாதவச்சேரியில் சாராயம் விற்ற 3 பேர் மீது கொலை வழக்கு உட்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதியப்பட்டுள்ளது.கள்ளக்குறிச்சி மாவட்டம், கச்சிராயபாளையம் அடுத்த மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் கடந்தை மகன் கண்ணன்,55; கலியன் மகன் வீரசாமி, 40; பழனிமுத்து மகன் வீரமுத்து,33; இவர்கள், கடந்த 18ம் தேதி அதேபகுதியில் விற்பனை செய்யப்பட்ட சாராயத்தை வாங்கி குடித்தனர்.அவர்களில் கண்ணன் கடந்த 19ம் தேதியும், வீராசாமி கடந்த 20ம் தேதி அவரவர் வீடுகளில் இறந்தனர். வீரமுத்து சேலம் அரசு மருத்துவமனையில் இறந்தார்.இதுகுறித்து கண்ணன் மகன் மணிகண்டன் அளித்த புகாரின் பேரில் கச்சிராயபாளையம் போலீசார், உயிரிழப்பு ஏற்படும் அபாயகரமான நச்சுப்பொருள் என தெரிந்தும் விற்பனை செய்தல், கொலை வழக்கு, விஷ நெடியுடன் கூடிய சாராயத்தை பதுக்கி வைத்தல் மற்றும் விற்பனை செய்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து மாதவச்சேரி சுடுகாடு பகுதியில் சாராயம் விற்ற அதே கிராமத்தை சேர்ந்த முத்து மகன் ராமர்,36; சேஷசமுத்திரம் பெரியசாமி மகன் சின்னதுரை,36; விரியூர் நடுப்பையன் (எ) ஜோசப்ராஜா, 35; ஆகியோரை கைது செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ