உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / சி.பி.ஐ., அதிகாரி எனக்கூறி டாக்டரிடம் ரூ.38.69 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

சி.பி.ஐ., அதிகாரி எனக்கூறி டாக்டரிடம் ரூ.38.69 லட்சம் மோசடி சைபர் கிரைம் போலீசார் விசாரணை

கள்ளக்குறிச்சி: சி.பி.ஐ., அதிகாரி எனக் கூறி, அரசு பெண் டாக்டரிடம் ரூ.38.69 லட்சம் மோசடி செய்த நபரை சைபர் கிரைம் போலீசார் தேடி வருகின்றனர்.கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலுாரை சேர்ந்த அரசு பெண் டாக்டர் ஒருவரை கடந்த 29ம் தேதி மொபைல் போனில் தொடர்பு கொண்ட மர்ம நபர், புதுடில்லியில் இருந்து சி.பி.ஐ., அதிகாரி பேசுவதாகவும், தங்கள் முகவரி மற்றும் மொபைல் எண்ணுடன், மலேசியாவிற்கு மெத்தபெட்டமின் போதை பொருள், 16 போலி பாஸ்போர்ட்டுகள், 58 ஏ.டி.எம்., கார்டுகள் அனுப்பப்பட்டுள்ளதாக விமான நிலைய சுங்க அதிகாரிகள் புகார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்த விசாரணைக்கு நீங்கள் டில்லி வர வேண்டும். வெளியில் யாரிடமும் கூற வேண்டாம். உள்ளூர் போலீசில் நீங்கள் கூறினால் உங்கள் வேலை பறிபோகும் எனக்கூறி, தங்கள் ஐ.டி., கார்டை அனுப்பினர்.பின்னர், இப்பிரச்னையில் இருந்த தப்பிக்க வேண்டும் எனில், தான் கூறும் வங்கி எண்ணிற்கு பணம் அனுப்புமாறு கூறினார். அதனை நம்பி பெண் டாக்டர், 6 தவணைகளில் ரூ.38 லட்சத்து 69 ஆயிரம் அனுப்பி உள்ளார். அதன்பிறகும் பணம் கேட்டு மிரட்டினார்சந்தேகமடைந்த பெண் டாக்டர், தனது கணவரிடம் நடந்த சம்பவத்தை கூறினார். அவர் அளித்த புகாரின் பேரில், மாவட்ட சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிந்து, மர்ம நபரை தேடிவருகின்றனர்.

போலீசார் எச்சரிக்கை

அரசு மருத்துவர்கள், தொழிலதிபர்களை ஆன்லைன் மூலம் நோட்டமிடும் மர்ம ஆசாமிகள் உயர் அதிகாரிகள் எனக் கூறி பல காரணங்களை கூறி மிரட்டி பணம் பறிக்கும் சம்பவங்கள் அதிகாரித்து வருகிறது.எனவே, அடையாளம் தெரியாத நபர்கள் மொபைல் போனில் பணம் கேட்டு மிரட்டினால் உடன் போலீசில் புகார் அளிக்குமாறு சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை