உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரம்

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில், டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதிகளில், சில தினங்களாக, ஆங்காங்கே மழை பெய்து வந்தது. இதையடுத்து, டெங்கு தடுப்பு நடவடிக்கையாக, மாவட்ட சுகாதார அலுவலர் ராஜா மற்றும் நகராட்சி ஆணையர் மகேஸ்வரி ஆகியோர் அறிவுறுத்தலின்படி, நகராட்சி பகுதிகளில், தொற்று நோய் பரவாமல் தடுக்கும் வகையில், டெங்கு கொசு ஒழிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது.நகராட்சி முழுவதும் சுகாதார துப்புரவு ஆய்வாளர் சையத்காதர் மற்றும் களப்பணி உதவியாளர் மகேஸ்வரி தலைமையில், 30க்கும் மேற்பட்ட கொசுப்புழு ஒழிப்பு பணியாளர்கள் ஒவ்வொரு பகுதியாக வீடுகள், கடைகள் உள்ளிட்டவைகளில் வைக்கப்பட்டுள்ள பூந்தொட்டி, டயர், தண்ணீர் தொட்டி, வாளிகள், தேங்காய் ஓடுகளில் தேங்கும் தண்ணீரில் இருந்து, டெங்கு கொசுக்கள் உற்பத்தி குறித்து ஆய்வு செய்யும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். சுகாதார ஆய்வாளர்கள் கவியரசன், விக்னேஷ்வரன், பாலா ஆகியோர் ஆய்வின்போது உடனிருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







முக்கிய வீடியோ