உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / மனைவியிடம் தகராறு: கணவர் மீது வழக்கு

மனைவியிடம் தகராறு: கணவர் மீது வழக்கு

திருக்கோவிலுார்: திருக்கோவிலுார் அருகே மனைவியிடம் தகராறு செய்து தாலிச் செயினை பறித்த கணவர் உட்பட 3 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.விழுப்புரம் மாவட்டம், சென்னகுணம் கிராமத்தைச் சேர்ந்தவர் வேலு மனைவி பொன்மலர், 30; கணவர் வேலு, ஆன்லைனில் ரம்மி விளையாடும் பழக்கம் உள்ளவர். இதன் காரணமாக மனைவியிடம் 3 சவரன் நகை மற்றும் 3 லட்சம் ரூபாயை பணத்தை வாங்கி ரம்மி விளையாடி இழந்து விட்டார்.மேலும் பொன்மலர் மீது கடன் வாங்கி அதனையும் கட்டவில்லை. இதன் காரணமாக கணவன், மனைவிக்கிடையே பிரச்னை ஏற்பட்டதால், பொன்மலர் தாய் வீடான ஜம்பைக்கு சென்று விட்டார். அங்கு சென்ற வேலு, அவரது தந்தை சண்முகசுந்தரம், 55; தம்பி பன்னீர்செல்வம் ஆகியோர் பொன்மலரிடம் தகராறு செய்து, அவர் அணிந்திருந்த தாலிச் செயினை பறித்தனர்.பொன்மலர் கொடுத்த புகாரின் பேரில், வேலு, சண்முகசுந்தரம், பன்னீர்செல்வம் ஆகிய 3 பேர் மீதும் திருக்கோவிலுார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை