| ADDED : மே 06, 2024 03:48 AM
சங்கராபுரம், : சங்கராபுரத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட வணிகர் சங்கம் சார்பில் கொடியேற்று விழா நடந்தது.வணிகர் தினத்தையொட்டி நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட பொருளாளர் முத்துக்கருப்பன் தலைமை தாங்கினார். பெட்ரோல் பங்க் உரிமை யாளர் சங்கத் தலைவர் ஜனார்தனன், நுகர் பொருள் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் சீனிவாசன், மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் ராஜேந்திரன் முன்னிலை வகித்தனர்.அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் குசேலன் வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்ட வணிகர் கூட்டமைப்புத் தலைவர் செல்வ குமார் வணிகர் சங்க கொடியேற்றினார்.மோட்டார் வாகன பழுது பார்போர் நலச்சங்கத் தலைவர் திருவேங்கடம் இனிப்பு வழங்கினார்.நிகழ்ச்சியில் மாநில இணைச் செயலாளர் ஜனனி மகாலிங்கம், மணலுார்பேட்டை சங்க கவுரவ தலைவர் சண்முகம், பாண்டலம் செந்தில், புதுப்பட்டு கதிரவன், சங்கராபுரம் நெல் அரிசி ஆலை சங்கத் தலைவர் வேலு, வியாபாரிகள் சங்க முன்னாள் தலைவர் பால்ராஜ் உட்பட பலர் பங்கேற்றனர்.நிகழ்ச்சியில், தேர்தல் காலத்தில் வணிகர்களிடம் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை உடனே வழங்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது.மணலுார்பேட்டை வர்த்தகர் சங்கத் தலைவர் ரவிச்சந்திரன் தாக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிப்பது என்பது உட்படபல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.