உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கள்ளக்குறிச்சி / ராமகிருஷ்ண குருகுலத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா

ராமகிருஷ்ண குருகுலத்தில் கல்வி வளர்ச்சி நாள் விழா

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை ராமகிருஷ்ண வித்யாலயா குருகுலத்தில் காமராஜரின் பிறந்த நாளையொட்டி, கல்வி வளர்ச்சி நாள் விழா கொண்டாடப்பட்டது.இதனையொட்டி பள்ளி மாணவ, மாணவிகளுக்கு ஓவியம், பேச்சு, கட்டுரை உட்பட பல்வேறு போட்டிகள் நடந்தன.போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களை ஆசிரம சகோதரி யத்தீஸ்வரி சச்சிதானந்த ப்ரியா அம்பா பாராட்டி, பரிசளித்தார்.விழாவில், குருகுலத்தின் சீனியர் முதல்வர் நிஷ்காமிய பிராணாமாஜி சிறப்புரையாற்றினார். ஆசிரம சகோதரிகள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ