| ADDED : மே 06, 2024 03:52 AM
கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் வருத்தினி ஏகாதசியையொட்டி, சிறப்பு பூஜை நடந்தது.ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாத தேய்பிறை காலங்களில் வரும் ஏகாதசி வருத்தினி ஏகாதசி எனக்கூறப்படுகிறது. இந்நாளில் விரதத்தை கடைபிடித்தால், பாவ விளைவுகளை குறைத்து நிரந்தர ஆனந்தம் அடைவார்கள் என்பது நம்பிக்கை. அதன்படி நேற்று முன்தினம் கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில் நடந்த வர்த்தினி ஏகாதசி வழிபாட்டில், உற்சவர் பெருமாளுக்கு 16 வகை மங்கல பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்தனர். சர்வ அலங்காரத்திற்குப்பின் மண்டபத்தில் எழுந்தருளச் செய்து, பகவத் சங்கல்பம், சாற்றுமுறை, சேவை, அலங்கார தீபங்கள் வழிபாடு நடந்தது. விரதமிருந்து கோவிலுக்கு வந்த ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.